search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் ரெயில் ரத்து"

    • அரக்கோணம்- ஜோலார்பேட்டை தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது.
    • நாளை (வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    சேலம்:

    அரக்கோணம்- ஜோலார்பேட்டை தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது. ஈரோட்டில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் ஈரோடு - ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் (வண்டி எண் 06846) 6, 7, 8-ந் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் ஜோலார் பேட்டையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் ஜோலார் பேட்டை- ஈரோடு ரெயில் (வண்டி எண் 06845) இன்று (வியாழக்கிழமை) மற்றும் 7, 8, 9 ஆகிய 4 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் ஈரோடு- ஜோலார்பேட்டை பாசஞ்சர் ெரயில் (வண்டி எண் 06412) நாளை (வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் ஜோலார் பேட்டையில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் ஜோலார் பேட்டை- ஈரோடு ரெயில் (06411) நாளை (வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • தண்டவாள பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • (நவம்பர்) 29-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சூரமங்கலம்:

    ஈரோடு-காவேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    இதனால் கோவை-சேலம் பயணிகள் ரெயில் (06802) மற்றும் சேலம்-கோவை பயணிகள் ரெயில் (06803) ஆகியவை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அடுத்தம் மாதம் (நவம்பர்) 29-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கோவை- திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • 30-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    சேலம்:

    கோவை- திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையை தவிர தினமும் இயக்கப்பட்டு வந்த சேலம் -கோவை பயணிகள் ரெயில் (06802) மற்றும் கோவை- சேலம் பயணிகள் ரெயில் (06803) வருகிற 30-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்த ரெயில் சேலம் ஜங்சனில் இருந்து வீரபாண்டி ரோடு, மகுடஞ்சாவடி, மாவேலிபாளையம், சங்ககிரி, காவிரி, ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை ஜங்சன் ரெயில் நிலையம் வரை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ×